ஒன்றிய அரசின் கண்துடைப்பு நடவடிக்கையை இலங்கை கடற்படை வாரந்தோறும் நிருப்பிக்கிறது – சு.வெங்கடேசன் எம்.பி
ஒன்றிய அரசின் கண்துடைப்பு நடவடிக்கையை இலங்கை கடற்படை வாரந்தோறும் நிருப்பிக்கிறது என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 16 பேரை அவர்களின் இரு விசைப்படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழக மீனவர்களின் 2 விசைப்படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கோடியக்கரை தமிழக மீனவர்கள் 15 பேர் மீது இலங்கை கடற்படை தாக்குதல். எனது கடிதத்திற்கு அமைச்சர் ஜெய்சங்கர் பதில் வருவதற்குள் இன்னும் 16 தமிழக மீனவர்கள் கைது. ஒன்றிய அரசின் கண்துடைப்பு நடவடிக்கையை இலங்கை கடற்படை வாரந்தோறும் நிருப்பிக்கிறது.’ என பதிவிட்டுள்ளார்.
கோடியக்கரை தமிழக மீனவர்கள் 15 பேர் மீது இலங்கை கடற்படை
தாக்குதல்.எனது கடிதத்திற்கு அமைச்சர் @DrSJaishankar
பதில் வருவதற்குள் இன்னும் 16 தமிழக மீனவர்கள்
கைது.ஒன்றிய அரசின் கண்துடைப்பு நடவடிக்கையை இலங்கை கடற்படை வாரந்தோறும் நிருப்பிக்கிறது. pic.twitter.com/8n7uywFq2G
— Su Venkatesan MP (@SuVe4Madurai) March 13, 2023