பி.கே பட பாணியில் ஆடையின்றி நடந்து சென்ற நபர்; வேற்று கிரகத்தை சேர்ந்தவர் என கூறியதால் பரபரப்பு.!
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள தெருவில் ஆடையின்றி நடந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க மாகாணமான புளோரிடாவின் பாம் பீச்சில் நிர்வாணமாக தெருவில் நடந்து சென்ற 44 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார், காவல்துறை விசாரணையில் அவர் தன்னை வேற்று பூமியிலிருந்து வந்தவர் என கூறியுள்ளார்.
போலிசார் நடத்திய விசாரணையில் அவர் தான் தங்கியிருக்கும் தகவல்களை தர மறுத்துவிட்டார், அடையாள அட்டை எதுவும் தன்னிடம் இல்லை என்று அவர் கூறினார்.
தான் வேற்று பூமியைச்சேர்ந்தவன் என கூறிய அந்த நபர், பின்னர் பாம் பீச் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டதில், அவர் ஜேசன் ஸ்மித் என்று அடையாளம் காணப்பட்டார். மேலும் ஸ்மித் புளோரிடாவில் உள்ள வெஸ்ட் பால்ம் கடற்கரையில் வசிப்பதாகவும் தெரியவந்தது.
அநாகரீகமான வெளிப்பாடு, ஒழுங்கீனமான நடத்தை மற்றும் வன்முறை இன்றி அதிகாரியைத் தடுத்து நிறுத்தியது உள்ளிட்ட மூன்று கிரிமினல் குற்றங்களின் கீழ் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.