12 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி சட்டப்பேரவையில் முழு பட்ஜெட் தாக்கல்!
புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை தாக்கலானது.
முழு பட்ஜெட் தாக்கல்:
புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி. புதுச்சேரி சட்டப்பேரவையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு முழு செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக இந்தாண்டு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு புதுச்சேரி மாநில பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளித்த நிலையில், இன்று தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி.
மத்திய அரசு ஒப்புதல்:
புதுச்சேரி மாநில சட்டசபையில் கடந்த 12 ஆண்டுகளாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. புதுச்சேரியில் கடந்த வருடம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு புதுச்சேரியில் முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால், கடந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.
கடந்த பட்ஜெட்டை விட அதிகம்:
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் தமிழிசை சவுந்ததராஜன் உரையுடன் தொடங்கிய நிலையில், இன்று ரூ.11,600 கோடிக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார் முதலமைச்சர் ரங்கசாமி. கடந்த பட்ஜெட்டை விட இந்த முறை புதுச்சேரி முழு பட்ஜெட்டிற்கு ரூ.1000 கோடி அதிகம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.