மாணவர்கள் மீதான தாக்குதல்.. மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.! மு.க.ஸ்டாலின் கண்டனம்.!
கேரள மாணவர்கள் மத்திய பிரதேச பல்கலைக்கழகத்தில் தாக்கப்பட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் , அமர்கந்தக்கில் உள்ள இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
கடந்த 10 ஆம் தேதி மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் தடைசெய்ப்பட்ட பகுதியான தண்ணீர் தொட்டி பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இது தெரிந்து அங்கு இருந்த பாதுகாவலர்கள் மாணவர்களை தாக்கியுள்ளனர். இதில், மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதில் படுகாயமடைந்த கேரள மாணவர்கள் நசீல், அபிஷேக், அத்னான், ஆதில் ரஷிப் ஆகிய 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், மாணவர்கள் மீதான இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, உயர்கல்வி நிறுவனங்களில் இது போன்ற மாணவர்கள் மீதான தாக்குதலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
I condemn the outrageous attack on students from Kerala at #IGNTU by security staff whose very duty is to protect the students.
I appeal to the Union Govt to intervene and stop the growing tendency of discrimination and attack against students in Higher Education Institutions.
— M.K.Stalin (@mkstalin) March 12, 2023