அவமானம் நிறைய கற்றுக்கொடுக்கிறது…இயக்குனர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பதிவு.!
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் ஆனதை தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் வாடகை தாய் மூலம் 2 குழந்தைகளைப் பெற்று கொண்டார்கள்.
2 குழந்தைகளைப் பெற்று கொண்டதை விக்னேஷ் சிவனே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை குழந்தைகளின் முகத்தை மக்களுக்கு காமிக்கவே இல்லை. ஏதேனும் பண்டிகைகள் வந்தால் கூட குழந்தைகளின் முகத்தை மறைத்து வைத்து கொண்டே புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், தற்போது விக்னேஷ் சிவன் தனது குழந்தைக்கு முத்தம் கொடுத்து அதற்கான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
இது தொடர்பாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது ” என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி. வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது, பாராட்டும் , வெற்றியும் நமக்குக் கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது” என பதிவிட்டுள்ளார்.