“சந்திரமுகி -2” திரைப்படத்தில் 2 சந்திரமுகி .! சூப்பரான லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!
கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான “சந்திரமுகி “ திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் ஆனது. முதல் பாகம் வெற்றியடைந்துள்ள நிலையில், தற்போது படத்தின் இரண்டாவது பாகம் விறு விறுப்பாக தயாராகி வருகிறது.
இந்த இரண்டாவது பாகத்தில் ராகவா லாரன்ஸ், லட்சுமி மேனன், வடிவேலு, ராதிகா, கங்கனா ரணாவத், ஸ்ருஷ்டி, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்து வருகிறார்.
படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடிக்கடி படம் குறித்த சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவுவது உண்டு. அந்த வகையில், “சந்திரமுகி -2” திரைப்படத்தில் 2 சந்திரமுகி கதாபாத்திரம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த திரைப்படத்தில் ஒரு சந்திரமுகி கங்கனா ரனாவத், மற்றொரு சந்திரமுகி லட்சுமி மேனன் என கூறப்படுகிறது. மாற்றுத்திறனாளியாக இருக்கும் லட்சுமி மேனன் எப்படி சந்திரமுகியாக மாறுகிறார் என்பதை படத்தில் பார்க்கும்போது, மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.