காதலித்து திருமணம் செய்த மனைவியை கத்தியால் குத்திய கணவன்!

Default Image

சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் சார்லஸ் நகர் அவ்வையார் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர், தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  மதுமிதா என்பவர் இவருடைய மனைவி ஆவார்.

இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் இன்ஜினீயரிங் முடித்து உள்ளனர். மதுமிதா சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் வேலை செய்து வந்தார். வெங்கடேசன் சென்னை உள்ள தியாகராயநகரில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

மதுமிதாவின் பெற்றோர், பட்டாபிராமில் வசித்து வருகின்றனர். வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த வெங்கடேசன்-மதுமிதா இருவரும் காதலித்து, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 1-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகு கடந்த 6 மாதங்களாக பட்டாபிராமில் உள்ள இந்த வீட்டில் அவர்கள் வசித்து வந்தனர்.

திருமணத்தின்போது மதுமிதாவின் பெற்றோர் 36 பவுன் நகைகளும், வெங்கடேசனுக்கு 3 பவுன் நகை மற்றும் சீர்வரிசைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பணம் பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று காலை மீண்டும் அவர்களுக்கு இடையே இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன், வீட்டின் சமையல் அறையில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் தனது காதல் மனைவி மதுமிதாவின் வயிறு, மார்பு உள்பட உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார்.

இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த மதுமிதா, அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பரிதாபமாக இறந்தார்.

மனைவி இறந்து விட்டதால் பயந்துபோன வெங்கடேசன், தானும் கத்தியால் கழுத்தை அறுத்தும், மார்பில் கத்தியால் குத்தியும் தற்கொலைக்கு முயன்றார். இதில் உயிருக்கு போராடிய அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டின் வெளியே அமர்ந்து இருந்த வீட்டின் உரிமையாளர் ஓடி வந்தார்.

அப்போது கணவன்-மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், பட்டாபிராம் போலீஸ்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இந்நிலையில் உதவி கமிஷனர் கண்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார்.

மேலும் பட்டாபிராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் உயிருக்கு போராடிய வெங்கடேசனை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்