ஓடிடியில் வெளியாகும் மெகாஹிட் “வாத்தி”.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

Default Image

தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியான “வாத்தி” திரைப்படம்  விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

Vaathi Blockbuster
Vaathi Blockbuster [Image Source : Google ]

இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை சாமியுக்தா மேனன் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

Vaathi Blockbuster Movie
Vaathi Blockbuster Movie [Image Source : Google ]

இந்த நிலையில், தற்போது வாத்தி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் இம்மாதம் 17ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. இதனால் திரையரங்குகளில் படம் பார்க்காத ரசிகர்கள் அனைவரும் ஓடிடியில் படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.

VAATHI OTT
VAATHI OTT [Image Source : Google ]

மேலும் வாத்தி திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி களுக்கு மேல் வசூல் செய்திருந்தது. எனவே, இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்