வெளிமாநிலத்தவர் குறித்து அவதூறு பேச்சு; சீமான் மீது வழக்குப்பதிவு.!
வெளிமாநிலத்தவர் குறித்து அவதூறு பரப்பும் விதமாக பேசிய குற்றச்சாட்டில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் வெளிமாநிலத்தவர் குறித்து வெறுப்புணர்வை தூண்டும் விதமாக பேசிய, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளிமாநிலத்தவர்கள் குறித்த தவறான வீடியோக்கள் இணையதளத்தில் பரப்பப்பட்டு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த மாதம் 13 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தல் பரப்புரையில் பேசிய சீமான், வடமாநிலத்தவர்கள் மீது தவறான வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் அவர்களை அச்சுறுத்தும் படி என பேசியிருந்தார்.
இதனையடுத்து வடமாநிலத்தவர் குறித்து தவறான உணர்வை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், வெளிமாநிலத்தவர் குறித்து தவறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, சீமான் மீது கடந்த 22ஆம் தேதியே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வெறுப்புணர்வை தூண்டுதல், அமைதியை கெடுத்தல், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுத்துதல், மற்றும் அவதூறாக பேசுதல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.