உலகின் முதல் 3டி அச்சிடப்பட்ட ராக்கெட்..! ஏவுதலின் கடைசி நொடியில் ரத்து..!
உலகின் முதல் 3டி அச்சிடப்பட்ட ராக்கெட் ஏவுதலின் போது கடைசி நொடியில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உலகின் முதல் 3டி-அச்சிடப்பட்ட ராக்கெட்டின் ஏவுதல் பல முயற்சிகளுக்குப் பிறகு கடைசி நொடியில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு விண்கலத்தின் உரிமையாளருக்கு பின்னடைவை அளித்துள்ளது. கலிபோர்னியா ஏரோஸ்பேஸ் ஸ்டார்ட்அப் ரிலேட்டிவிட்டி ஸ்பேஸ் நிறுவனத்தால் ஆளில்லா டெர்ரான் 1 என்ற ராக்கெட் உருவாக்கப்பட்டது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த என்ஜின்களை இயக்கத் தொடங்கினர்.
அப்போது “ஆட்டோமேஷன்” பிரச்சனை நிறுவனம் ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை நிறுத்தியது. ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாகும். சிறிது நேரம் கழித்து, நிறுவனம் புளோரிடாவின் கேப் கனாவரலில் இருந்து விண்கலத்தை விண்ணில் செலுத்த மீண்டும் முயற்சித்தது, ஆனால் ராக்கெட்டின் இரண்டாம் கட்டத்தில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக மீண்டும் நிறுத்தியது.
இந்த 3டி-அச்சிடப்பட்ட டெர்ரான் 1 ராக்கெட் புறப்பட்டவுடன் எட்டு நிமிட பயணத்தில் குறைந்த புவி சுற்றுப்பாதையை அடையும். இந்த ராக்கெட் குறைந்த புவி சுற்றுப்பாதையை அடைய முடிந்தால், மீத்தேன் எரிபொருளைப் பயன்படுத்தி விண்ணிற்கு சென்ற முதல் தனியார் ராக்கெட் இதுவாகும்.
The team went HARD today and we intend to do so during our next attempt. More to come on the new launch date and window soon. #GLHF pic.twitter.com/VVyrfF09sL
— Relativity Space (@relativityspace) March 11, 2023