#CUET2023: கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 30ம் தேதி வரை நீட்டிப்பு.
2023ம் ஆண்டுக்கான கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மார்ச் 30ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஏற்கனவே, க்யூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாக இருந்த நிலையில், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் மார்ச் 30ம் தேதி இரவு 9.50 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் பணம் செலுத்தும் நடைமுறையை இரவு 11.50 மணிக்குள் முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூட் தேர்வு விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 3 வரை திருத்தங்களைச் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். CUET (UG) – 2023க்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலுக்கு, http://nta.ac.in மற்றும் https://cuet.samarth.ac.in -ஐ பார்வையிடவும்.
மத்திய பல்கலைக்கழகங்களில் 2023ம் ஆண்டிற்கான இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான கியூட் நுழைவுத் தேர்வு மே மாதம் 21 முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The online Application Form for the CUET (UG) – 2023 has been extended as per the details given below. For more information, please visit https://t.co/cUvZGrXKqR and https://t.co/6511A38EDk pic.twitter.com/rtE8RoUQrK
— Mamidala Jagadesh Kumar (@mamidala90) March 10, 2023