டெல்லி கலால் கொள்கை விவகாரம்..! பிஆர்எஸ் தலைவர் கவிதா அமலாக்க இயக்குநரகத்தில் ஆஜர்..!
பிஆர்எஸ் தலைவர் கவிதா அமலாக்க இயக்குநரகத்தில் ஆஜர்.
டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக பிஆர்எஸ் தலைவரும், தெலுங்கானா முதல்வர் கே.சி.ஆரின் மகளுமான கவிதா கல்வகுந்த்லா இன்று அமலாக்க இயக்குனரகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
டெல்லி மதுபான கொள்கை :
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை சம்பந்தமாக அரசுக்கு பலகோடி ரூபாய் நிதி இழப்பீடு ஏற்பட்டதாகவும், அதன் மூலம் சட்டவிரோத பணபரிவார்த்தனை நடைபெற்றதாகவும் கூறி மணீஷ் சிசோடியாவை பிப்.26ஆம் தேதி 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் சிபிஐ கைது செய்தது.
மணீஷ் சிசோடியா கைது :
இந்த கைது நடவடிக்கைக்கு பின்னர், முதலில் 5 காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பின் மேலும் 2 நாள் காவலில் விசாரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த சிபிஐ காவல் முடிந்து மீண்டும் அவர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், மணீஷ் சிசோடியாவை மார்ச் 20ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கவிதா கல்வகுந்த்லா ஆஜர் :
டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் அருண் ராமச்சந்திர பிள்ளை கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதனைத்தொடர்ந்து பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினரும், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளுமான கே.கவிதா கல்வகுந்த்லா, இன்று அமலாக்க இயக்குனரகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
#WATCH | Delhi: BRS MLC K Kavitha arrives at the ED office in connection with the Delhi liquor policy case. pic.twitter.com/T9YWhk7mtQ
— ANI (@ANI) March 11, 2023
தனது கணவர் அனில் குமார் தேவனபாலியுடன் காரில் பாதுகாப்புடன் வந்தநிலையில், அலுவலகத்தில் குவிந்த ஆதரவாளர்களை நோக்கி கையை உயர்த்திக்காட்டினார். டெல்லியில் மதுபான வியாபாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி (AAP) தலைவர்களுக்கு கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பெரும் தொகையை ஆம் ஆத்மி கட்சி கோவா சட்டசபை தேர்தலில் பயன்படுத்தியதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Delhi: BRS MLC K Kavitha left from the residence of her father, Telangana CM K Chandrashekar Rao, for the ED office amid a gathering of party supporters.
(Source: K Kavitha office) pic.twitter.com/rgBt0rNwIu
— ANI (@ANI) March 11, 2023