திருச்செந்தூர் கோவிலில் நாட்டு வெடிகுண்டு.? வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு.!
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாட்டு வெடிகுண்டு போல ஒரு மார்ம பொருள் இருந்துள்ளதை அடுத்து போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
புகழ்பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றான தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று காலை வழக்கம் போல பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் நீராடினார்.
அப்போது கடற்கரை பகுதியில் நாட்டு வெடிகுண்டு போல ஒரு மர்மப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடனடியாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த மர்மப்பொருளை ஆராய்ந்த போது, அது திருவிழாவுக்கு பயன்படுத்தப்படும் வெடி பொருள் எனவும், அதுவும் பயன்படுத்தப்பட்டு செயலிழந்துவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது.