திமுகவை ஆட்சிக்காக அல்ல..! இதற்காக தான் அண்ணா தோற்றுவித்தார் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Default Image

நாடாளுமன்ற தேர்தலில் 40-ம் நமதே, நாளையும் நமதே என்ற உறுதியுடன் பணியை தொடங்குங்கள் என முதல்வர் பேச்சு. 

கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மாறுகட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், அதிமுக, தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

முதல்வர் உரை 

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்த முதல்வர் நான்தான் எனக்கூறி திடீரென்று கட்சி தொடங்கியவர்கள் இன்று அனாதையாக உள்ளனர். தேர்தலில் போட்டியிட அல்ல, மக்கள் பணியாற்ற தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் தான் திமுக. திமுகவை ஆட்சிக்காக அல்ல, தொழிலாளர்களுக்காக, தமிழ் சமூகத்துக்காக, இனத்துக்காக அண்ணா தோற்றுவித்தார்.

தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அண்ணா கொண்டுவந்தார்; தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை சட்டமாக்கி அண்ணா நிறைவேற்றி தந்தார். ஓராண்டு காலத்தில் சரித்திரத்தில் இடம்பெறக்கூடிய அளவுக்கு தீர்மானங்களைக் கொண்டு வந்தார் அண்ணா; இருமொழி கொள்கை, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது உட்பட முக்கிய 3 தீர்மானங்களை அண்ணா நிறைவேற்றினார்.

இந்திரா காந்தி காலத்தில் எமர்ஜென்சி எதிர்த்ததால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு திமுக உடந்தை என அபாண்ட பழியை சுமத்தி 1991இல் ஆட்சி கலைக்கப்பட்டது. இன்று மதம் சாதியின் மூலம் சிலர் குழப்பத்தை ஏற்படுத்தி திமுக ஆட்சி அகற்ற பார்க்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் 40-ம் நமதே

நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி அடைய இன்றே களமிறங்குங்கள். நாடாளுமன்ற தேர்தலில் 40-ம் நமதே, நாளையும் நமதே என்ற உறுதியுடன் பணியை தொடங்குங்கள். சென்ற முறை 39 தொகுதிகளில் வென்றோம் இந்த முறை மொத்தமாக 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்