கர்நாடக மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன் : ரஜினிகாந்த்..!
கர்நாடகாவில் காலா படம் திரையிடுவதா இல்லையா என்பதை மக்கள் முடிவுக்கு விட்டு விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ரஜினிகாந்த் நடித்த காலா படம் வருகிற 7-ந்தேதி திரைக்கு வருகிறது.
கர்நாடகத்தில் காலா படத்தை திரையிட எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அந்த படத்தை திரையிட மறுத்துள்ளது.
இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் பெங்களூர் சென்று காலா பட விநியோகஸ்தர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். காலா படத்தை திரையிடுவது தொடர்பாக அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி சமாதானப்படுத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ‘‘காலா படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பது பற்றி கர்நாடக மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன், திரைப்பட வர்த்தக சபை இந்த பிரச்சினையில் முடிவு எடுக்கும்’’ என்றார்.