சாதனை படைத்த இந்திய மருத்துவர்கள் ..!
பல மாதங்களாக மூச்சு விடமுடியாமல் தவித்து வந்த ஈராக்கைச் சேர்ந்த தியீ அலீம் என்பவருக்கு ஃபோர்ட்டீஸ் நினைவு ஆரய்ச்சி மருத்துவமனையில் மார்பில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த அறுவை சிகிச்சையில் அவருடைய மார்பில் இருந்து 9 கிலோ அளவிலான கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவர் உத்ஜித் திர் கூறுகையில், ‘தியீ அலீமின் மார்பில் நுரையீரலுக்கும் இதயத்துக்கும் இடையே இருந்த கட்டி அவரை மூச்சு விட விடாமல் செய்துள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு பலனளிக்கவில்லை. தியீ அலீம் ஃபோர்ட்டீஸ் மருத்துவமனையை அணுகும்போது மிகவும் மோசமான சூழ்நிலையில் இருந்தார்.
கடந்த ஏப்ரல் 21-ம் தேதி இவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது மார்பில் இருந்து இரத்தக்குழாய்களை அடைத்துக்கொண்டிருந்த 9 கிலோ எடையுள்ள கட்டியை நீக்கினோம். இப்போது அவர் நல்ல முறையில் சுவாசித்து நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்’ என தெரிவித்துள்ளார்.