தலைமுறைக்கு ஒருமுறை வரும் கிரிக்கெட்டர்; ஆஸ்திரேலியர் குறித்து அஷ்வின் புகழாரம்.!
ஆஸ்திரேலியாவின் கேமரூன் க்ரீன், தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே வரும் கிரிக்கெட்டர் என அஸ்வின் புகழ்ந்துள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் ஆஸ்திரேலிய அணி, பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4 வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இதன்படி ஆஸ்திரேலிய அணி இந்தியாவின் பந்துவீச்சை சர்வ சாதாரணமாக எதிர்கொண்டனர். ஒப்பனர் உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் க்ரீன் ஆகியோரின் சதத்தால் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 480 ரன்கள் என்ற வலுவான நிலையை எட்டியது.
தொடக்க வீரராக களமிறங்கிய உஸ்மான் கவாஜா ஒன்றரை நாட்கள் பேட்டிங் செய்து 180 ரன்கள் (422 பந்துகள்), மற்றும் கேமரூன் க்ரீன் 114 ரன்கள் குவித்தனர். இது குறித்து பேசிய அஸ்வின், கேமரூன் க்ரீன் போன்ற வீரர்கள் தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே வரும் கிரிக்கெட்டர், அவருக்கு இந்தியாவில் எவ்வளவு மதிப்பு கொடுக்கப்படுகிறது என்பதை ஐபிஎல் ஏலம் உங்களுக்கு எடுத்துரைக்கும் என்று அஸ்வின் கூறியுள்ளார்.
முதலிரண்டு மைதானங்களை விட 4-வது போட்டி நடக்கும் இந்த நரேந்திர மோடி மைதானம் பேட்டிங்கிற்கு நல்ல ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ள அஸ்வின், தனது முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்த கேமரூன் க்ரீன் குறித்து பாராட்டியுள்ளார். இந்தியா நேற்று முதல் இன்னிங்சில் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 36/0 ரன்கள் குவித்துள்ளது. முன்னதாக அஸ்வின் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்கள் வீழ்த்தினார்.