ஜெயலலிதாவுடன் ஒப்பீடு.! அண்ணாமலை தாய். மனைவி…. ஓபிஎஸ் ஆதரவாளர் கடும் விமர்சனம்.!
உங்கள் தாய் பற்றி பேசுவதற்கோ, உங்கள் மனைவியை பற்றி பேசுவதற்கோ நான் வரவில்லை. – அண்ணாமலை பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விமர்சனம்.
கடந்த ஒரு வரகாலமாகவே பாஜக மற்றும் அதிமுகவினர் இடையே கருத்து மோதல், சலசலப்பு நிலவி வந்தது. இதற்கு நேற்று முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் செல்லூர் ராஜு ஆகியோர் தனித்தனியாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். இனி அவ்வாறு நடக்காது என்று இருவருமே கூறியிருந்தார்கள். அதிமுக பாஜக கூட்டணி நீடிக்கிறது என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
இபிஎஸ் – பாஜக :
இந்நிலையில்,இந்த கருத்து மோதல் பற்றி பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில், கடந்த ஒரு வரமாக எடப்பாடி கோஷ்டி – அண்ணாமலை கோஷ்டி புகைப்படங்களை எரித்து அடிச்சிக்கிட்டு இருக்காங்க அது நமக்கு தேவையில்லாத ஒன்று என குறிப்பிட்டார்.
அண்ணாமலை மனநலம் :
அடுத்ததாக, அண்ணாமலையை விட அதிக ஐபிஎஸ் அதிகாரிகளை பார்த்தவன் நான். அண்ணாமலையை மக்கள் பலர் சந்தேகப்படுகிறார்கள். அவரது மனநலம் சரியாக இருக்கிறதா என சந்தேகப்படுகிறார்கள். என கடும் விமர்சனம் செய்தார்.
தாய் – மனைவி :
மேலும், அண்ணாமலை பேசுகையில், என்னுடைய தாய் ஜெயலலிதாவை விட 100 மடங்கு உயர்ந்தவர். என்னுடைய மனைவி 1000 மடங்கு உயர்ந்தவர் என கூறுகிறார். உங்க அம்மா, எங்க அம்மா தாய்மார்களுக்கும் , திமுக உள்ளிட்ட அனைவருக்கும்க்கும் தாயுள்ளத்தோடு செயல்பட்டவர் அம்மா. என பேசினார்.
புகழேந்தி விமர்சனம் :
மேலும் கூறுகையில், உங்கள் தாய் பற்றி பேசுவதற்கோ, உங்கள் மனைவியை பற்றி பேசுவதற்கோ நான் வரவில்லை. எனவும் தனது விமர்சனத்தை முன்வைத்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி.