ஆளுநரின் செயல்பாடுகள் மத்திய அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி தருகிறது – டிடிவி தினகரன்
மாநில அரசு என்ன சட்டம் இயற்றுகிறதோ, அதற்கு தன்னால் முடிந்த அளவு உதவுவது தான் ஆளுநரின் வேலை என டிடிவி தினகரன் பேட்டி.
இன்று பலருக்கும் ஆன்லைன் விளையாட்டுக்கள் தான் பொழுதுபோக்காகவே மாறிவிட்டது. அதிலும், பலர் இன்று ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அரசியல் கட்சியினர் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று முன்தினம், 4 மாதங்கள் கடந்தும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் மீண்டும் கூடுதல் விளக்கம் கேட்டு மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.
டிடிவி தினகரன் பேட்டி
இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்படும் ஆளுநரின் செயல்பாடுகள் மத்திய அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி தருகிறது. மாநில அரசு என்ன சட்டம் இயற்றுகிறதோ, அதற்கு தன்னால் முடிந்த அளவு உதவுவது தான் ஆளுநரின் வேலை என தெரிவித்துள்ளார்.