துணிவு இருக்கும் அண்ணாமலையிடம் பணிவு இல்லை.. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி!
தமிழ்நாட்டில் ஆளுநர் தன்னை ஒரு வைஸ்ராய் போல் நினைத்து செயல்படுகிறார் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்.
சிவகங்கையில் செய்தியாளார்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பணிவு இல்லாமல் துணிவை மட்டும் வைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைவராக வர முடியாது. பணிந்து போவதே எனது பழக்கம் அல்ல, என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருக்கிறார். பணிந்து போவது பழக்கம் இல்லை என்றால் எப்படி ஒரு அரசியல் தலைவராக இருக்க முடியும்?.
பணிவும் வேண்டும் அதே நேரத்தில் துணிவும் வேண்டும், பணிவு இல்லாத துணிவு தவறான பாதைக்கு வழிவகுக்கும் என்றார். மேலும், ஆன்லைன் ரம்மி மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியது தவறு. தமிழ்நாட்டில் ஆளுநர் தன்னை ஒரு வைஸ்ராய் போல் நினைத்து செயல்படுகிறார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் அடக்கி வாசிக்கின்றார்கள், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், வைஸ்ராய் போல் செயல்படுகிறார்கள் என விமர்சித்துள்ளார். இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் எந்த அச்சுறுத்தலும் கிடையாது என்று பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் வன்முறையை தூண்டி விடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.