இத்தாலியில் 1,000 பணியிடங்களை நீக்குகிறது வோடபோன்..! வெளியாகிய தகவல்..
வோடபோன் நிறுவனம் இத்தாலியில் 1,000 பணியிடங்களை நீக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புகழ்பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் (vodafone), ஒரு பெரிய செலவு சேமிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இத்தாலியில் சுமார் 1,000 பணியிடங்களை நீக்க உள்ளது. இத்தாலியில் தொழிற்சங்கங்களுக்கும், நிறுவனப் பிரதிநிதிகளுக்கும் இடையே ஒரு உள் நடைபெற்றது.
அந்த கூட்டம் முடிந்த பிறகு, நிறுவனம் அதன் செயல்பாடுகளை சீரமைக்க தொடரும் ஒரு பெரிய செலவு சேமிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இத்தாலியில் சுமார் 1,000 பணியிடங்களை குறைக்க உள்ளது என்று இரண்டு தொழிற்சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை செயல்முறை வரும் வாரங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர்கள் மேலும் கூறினர். இந்த பணியிடநீக்கம் குறித்து வோடபோன் நிறுவனம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த மார்ச் மாத நிலவரப்படி, இத்தாலியில் வோடபோன் பணியாளர்கள் மொத்தம் 5,765 ஆக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.