நான் தற்கொலை செய்தால் இவர்கள் தான் காரணம்…பரபரப்பை கிளப்பிய பிரபல நடிகை.!
பிரபல இந்தி நடிகையும், அரசியல்வாதியுமான, பாயல் கோஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதம் ஒன்று பரபரப்பை கிளப்பியுள்ளது. அந்த கடிதத்தில் நான் தற்கொலை செய்தால் இவர்கள் தான் காரணம் என்று யாருடைய பெரியாரையும் குறிப்பிடாமல் கடிதம் ஒன்று வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
இது தொடர்பாக பாயல் கோஷ் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது “நான் திடீரென, தற்கொலை செய்து கொண்டு இறந்தாலோ அல்லது எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றாலோ அதற்கு இவர்கள் தான் காரணம்” என கூறியுள்ளார்.
ஆனால், அவர் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. இதன் மூலம் சிலரை எச்சரிக்கும் விதமாக இந்த மாதிரி ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார் என தெரிகிறது. இந்த கடிதத்தை பார்த்த நெட்டிசன்கள் இதுபோன்ற எண்ணங்கள் வரக்கூடாது. ” உங்களுக்கு உதவி தேவை அல்லது யாரிடமாவது பேச வேண்டும்” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும், நடிகை பாயல் கோஷ் ஹிந்தியில் படேல் கி பஞ்சாபி ஷாதி, பிராயணம், ஆகிய படங்களிலும், தமிழில் தேரோடும் வீதியிலே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.