பங்குச்சந்தை சரிவு..! சென்செக்ஸ் 647 புள்ளிகள் குறைந்தது..!
பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 647 புள்ளிகள் குறைந்து 59,159 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,406 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தக நாளில் 59,259 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 647 புள்ளிகள் அல்லது 1.08% என குறைந்து 59,159 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 182 புள்ளிகள் அல்லது 1.04% குறைந்து 17,406 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,806 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,589 ஆகவும் நிறைவடைந்தது.
சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே லாபம் அடைந்துள்ளது.
ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, லார்சன் & டூப்ரோ, ஆக்சிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.
நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :
பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் , டாடா மோட்டார்ஸ் , மாருதி சுசுகி இந்தியா , டிவிஸ் லேபரட்டரீஸ் , பஜாஜ் ஆட்டோ , பார்தி ஏர்டெல் , ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ், ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ், லார்சன் & டூப்ரோ, ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.