தமிழ்நாட்டில் சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை – அமைச்சர் கணேசன்
தமிழ்நாட்டில் சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கணேசன் தகவல்.
சட்டவிரோத லைட்டர்கள்:
தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரிய கூட்டத்தில் பேசிய அமைச்சர் கணேசன், தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படுவதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தொழிலாளர்கள் கோரிக்கை:
சட்டவிரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களால் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள என்றும் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
அமைச்சர் உறுதி:
இந்த நிலையில், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்கள் மீது பொட்டலப் பொருள்கள் விதிகளின் கீழ் சிறப்பு குழுக்கள் அமைத்து பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.