இந்த கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை – அமைச்சர் மனோ தங்கராஜ்
மத்திய அரசு மக்களிடம் இருந்து பணத்தை சுரண்டுவதையே வாடிக்கையாக வைத்துள்ளது என அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி.
சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தின் துணை மேலாளர்கள் மற்றும் டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் கலந்து கொண்டார். இதில் அரசு கேபிள் நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அரசு கேபிள் கட்டணம் உயராது
இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், மத்திய அரசு மக்களிடம் இருந்து பணத்தை சுரண்டுவதையே வாடிக்கையாக வைத்துள்ளது. அரசு கேபிள் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.