பாஜக இல்லாமல் தமிழகத்தில் அரசியல் இல்லை.! எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேச்சு.!

Default Image

தமிழகத்தில் பாஜக இல்லாமல் அரசியல் நிகழ்வுகள் அரசியல் நகர்வுகள் நடக்காது. – பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேச்சு.

கடந்த சில நாட்களாக அதிமுக – பாஜக கட்சி பற்றிய செய்திகளை தான் அதிகம் படித்து வருகிறோம். பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுகவில் சேர்த்தார்கள் என்றும், அதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை எரித்தார்கள் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

அண்ணாமலை கருத்து :

இந்த சம்பவத்தை அடுத்து, அதிமுகவினர் போராட்டங்களையும், கண்டனங்களையும் பதிவு செய்து வந்தனர். பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தன்னை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோடு ஒப்பிட்டு பேசினார். அதற்கும் அதிமுகவினர் கண்டனம் தெரிவித்தனர்.

அதிமுக – பாஜக மோதல் :

இதனால் பாஜக – அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என அரசியல் வட்டாரத்தில் சந்தேகம் எழ தொடங்கியது. அப்போது தான், இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக – பாஜக இடையே எந்த மோதலும் இல்லை என கூறியிருந்தார்.

வானதி சீனிவாசன் பேச்சு :

MLA Vanathi Srinivasan

இந்த சமயத்தில் தற்போது பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நினைவு விருதுகள் வழங்கும் விழாவில் பேசுகையில், தமிழகத்தில் பாஜக இல்லாமல் அரசியல் நிகழ்வுகள் அரசியல் நகர்வுகள் நடக்காது என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், பொறுப்பும் பொறுமையும் சரிவிகிதத்தில் கொண்டு அரசியல் பணியை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல வேண்டும் எனவும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அந்த நிகழ்வில் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்