சுமார் 1000 நாய்களே அடைத்து வைத்து பட்டினி போட்டே கொன்ற முதியவர்..!

தென் கொரியாவில்  முதியவர் ஒருவர், 1,000க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து அடைத்து வைத்து பட்டினி போட்டே கொன்றுள்ளார். 

தென் கொரியாவில் 60 வயது முதியவர் ஒருவர், 1,000க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து அடைத்து வைத்து, அவற்றை உணவளிக்காமல் பட்டினி போட்டே கொன்றுள்ளார். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தென்கொரியா காவல்துறை கூறுகையில், கைவிடப்பட்ட நாய்களை எடுத்துச் சென்று இறக்கும் வரை பட்டினி போட்டதாக வாக்குமூலம் அளித்ததாக கோரியுள்ளார். விலங்கு உரிமை ஆர்வலர்கள், 2020 ஆம் ஆண்டு முதல் நாய் ஒன்றுக்கு 10,000 கவனிப்பதற்காக வாங்கியுள்ளார்.

தென் கொரியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட ஜியோங்கி மாகாணத்தில் உள்ள யாங்பியோங்கில் ஒரு உள்ளூர் நபர் தனது சொந்த நாயை தேடிக்கொண்டிருந்தபோது, இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நாய்களின் சிதைந்த சடலங்கள் தரையில் ஒரு அடுக்கை உருவாக்கியது. பட்டினியால் வாடிய நாய்கள் கூண்டு, சாக்கு, ரப்பர் பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. இறந்த நாய்கள் இந்த வாரம் அகற்றப்படும் என்று யாங்பியோங்கில் உள்ள உள்ளூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நான்கு நாய்கள் சித்திரவதையான சூழ்நிலையில் இருந்து தப்பித்து, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தோல் நோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. நான்கு நாய்களில் இரண்டு நாய்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தென் கொரியாவில் கடுமையான விலங்கு பாதுகாப்பு சட்டங்கள் இருந்தாலும், வேண்டுமென்றே ஒரு விலங்குக்கு உணவளிக்கவோ அல்லது தண்ணீர் கொடுக்கவோ தவறி கொலை செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 30 மில்லியன் அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment