அதிமுக – பாஜக கூட்டணியில் எந்த மோதலும் இல்லை… முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்.!
பாஜக – அதிமுக இடையில் மோதல் எதுவும் இல்லை. மாநில அளவில் அதிமுக தலைமையிலான கூட்டணி. தேசிய அளவில் தேசிய கட்சி தலைமையில் கூட்டணி. – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பாராளுமன்ற தேர்தல் :
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு அதிமுக முக்கிய நிர்வாகி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், இன்று கழக வளர்ச்சி பணிகள் குறித்தும், பாராளுமன்ற தேர்தல் குறித்தும் அதிமுக தலைமை செயலகத்தில் ஆலோசிக்கப்பட்டது. என குறிப்பிட்டார்.
பொதுச்செயலாளர் தேர்தல் :
மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்க இபிஎஸ் உத்தரவிட்டார். என குறிப்பிட்டார், மேலும், பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து இன்று விவாதிக்கவில்லை என்றும் , இபிஎஸ் படத்தை பாஜகவினர் எரித்தது ஏற்கமுடியாதது. என்றும் குறிப்பிட்டார்.
அதிமுக – பாஜக :
அடுத்ததாக, பாஜகவினரும் அதனை கருத்தில் கொண்டு செயல்பட்டனர். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என நம்புகிறோம் என குறிப்பிட்டார். பாஜக – அதிமுக கூட்டணி பற்றி கேட்டபோது, சிலர் ஏதேதோ சொல்கிறார்கள். எங்களுக்குள் மோதல் எதுவும் இல்லை. மாநில அளவில் அதிமுக தலைமையிலான கூட்டணி. தேசிய அளவில் தேசிய கட்சி தலைமையில் கூட்டணி. என விளக்கம் அளித்தார்.
அண்ணாமலை கருத்து :
அடுத்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியது பற்றி ஜெயக்குமார் கூறுகையில், அது அவருடைய தனிப்பட்ட கருத்து. மீண்டும் ஒருவர் அம்மா (ஜெயலலிதா) போல பிறக்கப்போவதுமில்லை. அவரை யாருடனும் ஒப்பிட முடியாது என குறிப்பிட்டார்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் :
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் பற்றி பேசுகையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை சட்டம் வேண்டும் என்பதே அதிமுக விருப்பம் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.