மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு.. ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கண்டனம்!

Default Image

ஆன்லைன் சூதாட்டத்தை தடை அரசுக்கு அதிகாரம் உள்ளது என ஆய்வுக்குழு தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பேட்டி.

தமிழக ஆளுநரின் செயல்பாடு உள்நோக்கம் கொண்டதாக தெரிவிக்கிறது என ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய, ஆன்லைன் சூதாட்ட தடை ஆய்வுக்குழு தலைவர் நீதிபதி சந்துரு,  மசோதாவை திருப்பி அனுப்புவதற்கு 4 மாத அவகாசம் எடுத்திருக்க தேவையில்லை.

ஆளுநர் செயலுக்கு கண்டனம்:

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு. தற்போதைய மசோதா எந்த வடிவத்தில் உள்ளதோ அதே வடிவத்தில் தான் அவச சட்டம் இயற்றப்பட்டது. அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் சட்ட மசோதாவை திருப்பி அனுப்பியது ஏன்? என்றும் ஆளுநரின் செயல்பாடு மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கையை தாமதப்படுத்தும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாநில அரசுக்கு அதிகாரம்:

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தமிழக அரசு மோசடியாக பார்க்கிறது. மோசடியாக கருதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்றி உள்ளது. மேலும், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. அரசமைப்பு சட்டம் பற்றி அறியாதவர்களே மாநில அரசுக்கு அதிகாரமில்லை மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என கூறுகின்றனர் என விமர்சித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்