ஆளுநரின் செயல் மனிதாபமானமற்றது.! திமுக எம்பி திருச்சி சிவா கண்டனம்.!
ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்புவது மனிதாபமானமற்றது. – திமுக எம்.பி திருச்சி சிவா பேட்டி.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு 4 மாதங்கள் ஆகியும் இன்னும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார்.
நேற்று, ஆளுநர் மாளிகையில் இருந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட திருத்த மசோதாவுக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திமுக எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், சட்டப்படி எங்களுக்கு ஒரு சட்டத்தை திரும்ப நிறைவேற்ற எங்களுக்கு உரிமை உள்ளது. சட்டப்படி அதனை மறுக்கும் உரிமை ஆளுநருக்கு இல்லை. ஆளுநர் அதனை திருப்பி அனுப்புவது மனிதாபமானமற்றது. பல உயிர்கள் போவது பற்றி கவலைப்படாத செயலாகும் . இதற்கு முதல்வர் உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என திமுக எம்பி திருச்சி சிவா பேசினார்.