அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் எப்போது? – இபிஎஸ் தலைமையில் ஆலோசனை தொடங்கியது!
பாஜக – அதிமுக கூட்டணியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சலசலப்பு மத்தியில் இபிஎஸ் தலைமையில் ஆலோசனை.
சென்னையில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாளை தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசிக்க உள்ள நிலையில் மாவட்ட செயலாளர்களுடன் பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவது தொடர்பாகவும், கட்சி வளர்ச்சி பணிகள், இடைத்தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக – அதிமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பரபரப்பான சூழலில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக – அதிமுக கூட்டணியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சலசலப்பு மத்தியில் ஆலோசனை நடைபெறுகிறது. மேலும், ஓபிஎஸ்-யின் சட்ட போராட்டத்தை எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.