ரஜினிகாந்த் இவர்களுடன் கூட்டணியா?

Default Image
பாஜக-வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று ஆளுநர் மாளிகையில் சந்தித்தார்.  இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”பழைய நண்பர் என்பதால் தமிழக ஆளுநரை சந்தித்தேன்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகமாகிவிட்டதால் அது பற்றி பேசினோம். ஆளுநர் மாளிகையின் செலவை ஆறில் ஒரு பங்காக குறைத்து உள்ள பன்வாரிலால் புரோகித்துக்கு வாழ்த்து கூறினேன் ” எனக் கூறினார்.

மேலும் பேசிய சுப்பிரமணியன் சுவாமி,  “தற்போது தமிழகத்தில் இருக்கும் ஆட்சி திமுக -வை விட நன்றாக உள்ளது. தமிழகத்தில் நக்சலைட், விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மற்றும் கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களால் தீவிரவாதம் அதிகரித்து உள்ளது.

எனவே தூத்துக்குடி போராட்டத்தில் பயங்கரவாதிகள் இருந்தார்களா என்று விசாரணை அறிக்கையை பார்த்த பின் தான் சொல்ல முடியும்” என  செய்தியாளர்களிடம் தெரிவித்த அவர் ரஜினிகாந்த் பா.ஜா.க.வுடன் கூட்டணி வைப்பது குறித்து அக்கட்சியின் செயற்குழுவில் விவாதிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Madurai Airport Protest
MTC - Train Cancelled
Kasthuri Arrest
Hockey Asia Cup
Trump - Zelensky
Dhanush - Nayanthara