புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது!
சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் தொடங்கியது. மார்ச் 13-ஆம் தேதி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் தராத நிலையில், அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு தான் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க. ஆட்சி அமைந்த பின்னர் முழு பட்ஜெட் முதல் மார்ச் மாதத்தில் தாக்கல் செய்ய முதலமைச்சர் ரங்கசாமி நடவடிக்கை எடுத்து வந்தார்.
இந்த நிலையில், புதுச்சேரி மாநில பட்ஜெட் கூட்டத்தொடர், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உரையுடன் தொடங்கியுள்ளது. வரும் 13ம் தேர்த்தி புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இப்போது, மாநில அந்தஸ்து, மின்துறை தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில், பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட உள்ளது என்பது குறிபிடத்தக்கது.