பாலிவுட் நடிகர் சதீஷ் கௌசிக், காலமானார்.!

Default Image

மூத்த பாலிவுட் நடிகர் சதீஷ் கௌசிக், தனது 67 வயதில் காலமானார்.

மூத்த பாலிவுட் நடிகர் மற்றும் இயக்குனர் சதீஷ் கௌசிக், தனது 67 வயதில் காலமானார், அவரது மரணத்திற்கான காரணம் தெரியவில்லை. இதனை கௌஷிக்கின் நண்பரும் எம்.எஸ்.தோனி திரைப்படத்தில் தந்தையாக நடித்தவருமான அனுபம் கேர் தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அனுபம் கேர் தனது ட்விட்டரில், இறப்பு என்பது இந்த உலகின் இறுதி உண்மை! ஆனால் நான் என் சிறந்த நண்பர், சதீஷ் கௌஷிக் பற்றி இந்த விஷயத்தை எழுதுவேன் என்று நான் என் கனவில் கூட நினைத்ததில்லை. 45 வருட நட்பின் திடீர் முற்றுப்புள்ளி. சதீஷ், நீ இல்லாமல் வாழ்க்கை இனி ஒரே மாதிரியாக இருக்காது! ஓம் சாந்தி! என்று பதிவிட்டுள்ளார்.

ஏப்ரல் 13, 1956 இல் பிறந்த சதீஷ் சந்திர கவுசிக், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நகைச்சுவை நடிகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்ட அவர் ராம் லக்கன், சாஜன் சாலே சசுரல், ஜானே பி தோ யாரோ போன்ற படங்களில் நடித்துள்ளார் மற்றும் ரூப் கி ராணி சோரோன் கா ராஜா, ஹம் ஆப்கே தில் மே ரெஹ்தே ஹைன், தேரே நாம், கியோன் கி, மேலும் சமீபத்தில் பங்கஜ் திரிபாதியுடன் காகஸ் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்