முதல்வர் மகளுக்கு சம்மன்.! டெல்லியில் அமலாக்கத்துறை முன் ஆஜராகும் கவிதா.!

Default Image

சட்டவிரோத பணபரிவார்த்தனை தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். 

டெல்லி மதுபான கொள்கை விவகாரம் தற்போது நாட்டில் மிக பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. இந்த புதிய மதுபான கொள்கை மூலம் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கூறி ஏற்கனவே சிபிஐ வழக்குப்பதிவு செய்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கைது செய்துள்ளனர்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை :

அதே போல, புதிய மதுபான கொள்கையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி டெல்லி அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அமித் அரோ :

இதில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமித் அரோவிடம் விசாரணை நடத்தப்பட்ட பின்னர், அவர் மூலமாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவின் பெயர் வெளியில் தெரிந்தது.

கவிதா ஆஜர் :

இதனை தொடர்ந்து அவரை விசாரிக்க அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்நிலையில் இன்று டெல்லில் அமலாக்கத்துறை முன் கவிதா ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்