கமல்ஹாசனுடன் இணையும் ‘லவ் டுடே’ பிரதீப்.! பட்ஜெட் மட்டும் இத்தனை கோடிகளா.?
கோமாளி, லவ்டுடே படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது என்றே கூறலாம். ஒரு பக்கம் அவர் மீண்டும் ஒரு படத்தை இயக்கி நடிக்க போகிறார் என்றும், மற்றோரு பக்கம் பிரதீப்பின் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என்றும் தகவல்கள் பரவி வருகிறது.
இதில் அவர் விக்னேஷ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே லவ் டுடே திரைப்படத்தில் அவரே நடித்து இயக்கி இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் மக்கள் மனதை கவர்ந்துவிட்டார்.
எனவே, அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக பரவும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. மேலும், இவர்கள் இணையும் இந்த படம் குறித்து லேட்டஸ்ட் ஆகவும் சில தகவல் பரவியுள்ளது. அது என்னவென்றால், விக்னேஷ் சிவன் + பிரதீப் ரங்கநாதன் இணையும் இந்த படத்தை கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளாராம்.
அது மட்டுமின்றி, இந்த திரைப்படம் கிட்டதட்ட 45 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. படத்திற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் கசிந்துள்ளது.மேலும் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ள அடுத்த படத்தின் அப்டேட் இன்று மாலை 6.30 க்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.