தலைப்பைப் பார்த்தால் எதிர்மறையாக இருக்கலாம்; உண்மையில் அது நேர்மறையானதே! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Default Image

பெண்களின் சமூகப் பங்களிப்பு இந்தியாவிலேயே தென் மாநிலங்களில்தான் அதிகம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட். 

சில்லரை கடன் பிரிவில், பெண்களின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து, கடன் தரவுகள் நிறுவனமான ”கிரிப் ஹைமார்க்’ ஒரு பகுப்பாய்வை வெளியிட்டுள்ளது. இதில், பெண்கள் கடன் வாய்ப்பு வசதிகளை எந்த அளவுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். என்ற தரவுகள் வழங்கப்பட்டு உள்ளன.

முதல்வர் ட்வீட் 

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தலைப்பைப் பார்த்தால் எதிர்மறையாக இருக்கலாம்; உண்மையில் அது நேர்மறையானதே!

வீடு – வணிகம் – சொத்து ஆகிய பிரிவுகளில் பல்வேறு தொழில் முனைவுகளுக்காகக் கடன் வாங்கும் பெண்கள் பட்டியலில், தமிழ்நாட்டுப் பெண்கள் இரண்டாம் இடத்திலும், தனிநபர் கடனில் முதலிடத்திலும் உள்ளனர் என்பதுதான் அந்தச் செய்தி.

பெண்களின் சமூகப் பங்களிப்பு இந்தியாவிலேயே தென் மாநிலங்களில்தான் அதிகம்; அதிலும், தமிழ்நாட்டுப் பெண்கள் எந்தளவுக்குப் பொருளாதார சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் உணர்த்தும் அந்தச் செய்தி, தேசிய மகளிர் தினத்தில் மகிழ்ச்சியான செய்தி!’ என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்