வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்டவர் மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்ட காவல்துறை..!
வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியதாக கைது செய்யப்பட்ட மனோஜ் யாதவ் மன்னிப்பு கேட்ட வீடியோவை வெளியிட்ட தமிழ்நாடு போலீஸ்
தமிழ்நாட்டில் தங்கியுள்ள தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக, போலியாக வீடியோ வெளியிட்ட ஜார்கண்டை சேர்ந்த மனோஜ் யாதவ் காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார்.
சென்னையை அடுத்த மறைமலை நகரில் மனோஜ் யாதவ் கைது செய்யப்பட்ட நிலையில், உடந்தையாக இருந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு ஸ்ஹ்எய்யப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு போலீஸ், மனோஜ் யாதவ் மற்றும அவரது நண்பர்கள் மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர். மேலும், வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
One manoj Yadav of Jharkhand and his friends, who are migrant workers residing at maraimalai Nagar area, created a video as if they are beaten up by Tamil people, and facing lot of problems in their work place (1/3) pic.twitter.com/PSajzsEnvj
— Tamil Nadu Police (@tnpoliceoffl) March 7, 2023