ஹோலி பண்டிகையின் காரணமும்.. ஒவ்வொரு வண்ணங்களின் அர்த்தமும்…

Default Image

வசந்த காலமான கோடைகாலத்தை வரவேற்கும் விதமாகவும், கிருஷ்ண பகவான் கோபியர்களுடன் வண்ணம் பூசி கொண்டாடி மகிழ்ந்த தினம் என்றும் ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

வசந்தகால தொடக்கத்தை வரவேற்கும் விதமாக ஹோலி பண்டிகையானது வடமாநிலத்தவரக்ள் நாடுமுழுவதும் கொண்டாடி வருகின்றனர். இதற்கு பல்வேறு கரணங்கள் கூறப்படுகிறது. அதாவது, வசந்த காலமான கோடைகாலத்தை வரவேற்கும் விதமாக மக்கள் பௌர்ணமி அன்று ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

ஆன்மீக காரணம் :

இன்னொரு ஆன்மீக காரணமாக கிருஷ்ண பகவான் கோபியர்களுடன் கொண்டாடி மகிழ்ந்த தினம் தான் ஹோலி பண்டிகை எனவும் கூறி வருகின்றனர். அதாவது, இரணியன் எனும் அரக்கனை இரணியனின் சொந்த மகன் பிரகலாதனே எதிர்த்து நின்றான். பிரகலாதன் மகாவிஷ்ணுவின் தீவிர பக்தன். ஆதலால், இரணியன் தன் மகனை பிரகலாதனை வதம் செய்ய நினைத்தான்.

தங்கை ஹோலிகா :

அதற்காக, இரணியனின் தங்கை ஹோலிகா, நெருப்பினாலும் அழியாத வரம் பெற்றவளை, அழைத்து, பிரகலாதனை மடியில் அமர்த்தி நெருப்பில் உட்கார சொன்னான். அதன் படி, பிரகலாதன் இறந்துவிடுவான். ஹோலிகா மீண்டு வந்துவிடுவாள் என இரணியன் நினைத்தான்.

பௌர்ணமி :

ஆனால்,  மகாவிஷ்ணுவின் பக்தனான பிரகலாதன் நெருப்பில் இருந்து உயிர்தெழுந்தான். ஹோலிகா மரணித்தாள். இதனை குறிப்பிடும் வகையில் தான் பால்குனி மாதம் பௌர்ணமியில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது என்கிறது ஒரு வரலாற்று செய்தி.

வண்ண பொடிகள் :

அன்றைய தினம் பல அர்த்தங்களை குறிக்கும் வண்ண வண்ண பொடிகளை பூசி நெருப்பு மூட்டி மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதே போல ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. அதனை கீழே பார்க்கலாம்.

வண்ணங்களின் அர்த்தங்கள் :

நீல நிறமானது வலிமை மற்றும் ஆன்மீக வளர்ச்சியை உணர்த்தும் விதமாக அமைகிறது. சிவப்பு நிறமானது கருணை மற்றும் கருத்தரித்தல் போன்றவற்றை குறிப்பதாக அமைகிறது. ஆரஞ்சு நிறம் என்பது புதிய தொடக்கத்தையும், மன்னிப்பின் அவசியத்தையும் உணர்த்துகிறது.

மஞ்சள் நிறமானது மகிழ்ச்சி, அமைதி , கொண்டாட்டம், தியானம், அறிவு மற்றும் கற்றல் ஆகியவற்றை உணர்த்துகிறது. பிங்க் நிறமானது கனிவு, கருணை மற்றும் நல்ல எண்ணங்களை போதிப்பதாக உள்ளது. பச்சை நிறம் என்பது இயற்கை வளமான வாழ்க்கை, அறுவடை போன்றவற்றை உணர்த்துகிறது. பர்பிள் நிறமானது மாயம் மற்றும் மந்திர சக்தியை உணர்த்து விதமாக பூசப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்