யாரும் நம்பாதீங்க… அந்த செய்திகள் வெறும் வதந்தி..! மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்.!
ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை, ஒன்றாக இணைப்பதற்கு ‘ஆதார் – மின்சார எண்’ இணைக்க வலியுறுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் பொய்யான கருத்துகள் பரவி வருகிறது. – மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.
ஆதார் எண்ணை – மின் இணைப்பு என்னோடு இணைக்க வலியுறுத்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த இணைப்பு நடவடிக்கையானது கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து இருந்து கடந்த மாதம் நிறைவு பெற்றது.
வைரலான கடிதம் : இந்நிலையில், அண்மையில் சமூக வலைத்தளத்தில் தமிழநாடு மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கையெழுத்திட்ட மின்வாரிய உத்தரவு வைரலானது. அதில் குறிப்பிட்ட ஒரு நபரின் பெயரை பதிவிட்டு, அவரது ஆதார் எண்ணுடன் – பல்வேறு மின் இணைப்புகள் இருப்பதாகவும், அதனை எல்லாம் ஒன்றாக இணைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அமைச்சர் விளக்கம் : இதனை தொடர்ந்து இது போல தான் அரசு நடவடிக்கை எடுக்கபோகிறது என சிலர் பொய்யான வதந்திகளை பரப்ப ஆரம்பித்து விட்டனர். இதனை அடுத்து, நேற்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
பொய்யான தகவல்கள் : அதில், ஒரு வீட்டில் ஒரே நபரின் பெயரில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகளை, ஒன்றாக இணைப்பதற்கு ‘ஆதார் – மின்சார எண்’ இணைக்க வலியுறுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரவி வருகிறது என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும், மேற்கண்ட இணைப்பு நடவடிக்கை மேற்கொண்டதாக பரவும் கடிதமானது, மின்சாரதுறை அதிகாரியின் தனிப்பட்ட கள ஆய்வு செயலாகும். தற்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.