DCWvsUPW : அட்டகாசமான பேட்டிங்கில் 211 ரன்களை குவித்தது டெல்லி கேபிடல்ஸ்..!
யூபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 211 ரன்கள் குவித்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரின் 5-வது போட்டியில் யூபி வாரியர்ஸ் அணி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற யூபி வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி தனது அபார பேட்டிங் திறமையால் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்கள் குவித்துள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் அணியில் அதிகபட்சமாக மெக் லானிங் 70 ரன்களும், ஜெஸ் ஜோனாசென் 42 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்களும், ஆலிஸ் கேப்ஸி 21 ரன்களும் குவித்துள்ளனர். யூபி வாரியர்ஸ் அணி வெற்றி பெற 212 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.