தடைகளை தகர்த்து தவிடு பொடியாக்கி… சாதனைகளாக தடம் பதிக்க அனைத்து மகளிரையும் வாழ்த்துகிறேன் – தமிழிசை
ஆளுநர் தமிழிசை அவர்கள் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
நாளை நாடு முழுவதும் தேசிய மகளீர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பாலரும் வருகின்றனர். அந்த வகையில் ஆளுநர் தமிழிசை அவர்கள் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், பெண்கள் தங்களது தகுதியை, துணிச்சலை வளர்த்துக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். குடும்ப கட்டமைப்போடு சேர்ந்த வளர்ச்சிதான் இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்ப்பது.
தடைகளை தகர்த்து தவிடு பொடியாக்கி… சாதனைகளாக தடம் பதிக்க அனைத்து மகளிரையும் வாழ்த்துகிறேன். அனைத்து மகளிர்களுக்கும் எனது இனிய சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
தடைகளை தகர்த்து தவிடு பொடியாக்கி… சாதனைகளாக தடம் பதிக்க அனைத்து மகளிரையும் வாழ்த்துகிறேன். அனைத்து மகளிர்களுக்கும் எனது இனிய சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்.#WomensDay2023#InternationalWomensDay#InternationalWomensDay2023@MinistryWCD @NCWIndia pic.twitter.com/ubnGPqcscz
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) March 7, 2023