ஒரு நாளைக்கு 36 கோடி ரூபாய்.! அசுர வளர்ச்சியில் UPI பரிவர்த்தனைகள்.! ரிசர்வ் வங்கி ரிப்போர்ட்.!

Default Image

தினசரி UPI பரிவர்த்தனைகளானது நாடளவில் 36 கோடியைத் தாண்டியுள்ளது. இது கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 24 கோடியாக இருந்தது குறிப்பிடதக்கது. 

தற்போதைய காலகட்டத்தில் கையில் பணம் வைத்து பொருள் வாங்குவதை விட UPI வழியாக எளிதாக இணையவழி காகிதமில்லா பணபரிவர்தனையையே மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதன் பயன்பாடும் நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பல்வேறு புள்ளி விவரங்களை வெளியிட்டுளளார்.

அதில் 2016ஆம் ஆண்டு மக்கள் மத்தியில் இந்த UPI பயன்பாடு புழக்கத்தில் வர துவங்கியது. ஆரம்பத்தில் 2017 ஜனவரியில் நாடு முழுவதும் வெறும் 0.45 கோடி UPI பரிவர்த்தனைகளே பதிவாகியுள்ளன. அந்த அளவு பன்மடங்கு அதிகரித்து 2023 ஜனவரியில் 804 கோடி பரிவர்த்தனையாக அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் UPI பரிவர்த்தனைகளின் மதிப்பு வெறும் ரூ.1,700 கோடியாக இருந்தது. தற்போது அதன் மதிப்பு ரூ.12.98 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

அதே போல, கடந்த 12 மாதங்களில் அதிவேகமாக UPI பரிவர்த்தனைகள் வளர்ந்துள்ளது. தினசரி பரிவர்த்தனைகளானது 36 கோடியைத் தாண்டியுள்ளது, இது கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 24 கோடியாக இருந்து தற்போது சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதே போல, மதிப்பு அடிப்படையில் பார்த்தல், இந்த பரிவர்த்தனைகள் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.6.27 லட்சம் கோடியாகும். இதுவே கடந்த பிப்ரவரி 2022 இல் ரூ. 5.36 லட்சம் கோடியாக இருந்து 17 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும், 75 சதவீதத்திற்கும் மேலாக UPI பணபரிவர்த்தனையானது ஒரு நபரிடம் இருந்து இன்னொரு நபருக்கோ, அல்லது ஒரு நபரிடம் இருந்து வணிக மையங்களுக்கோ நடைபெறுகிறது என்றும், இந்தியாவின் UPI பரிவர்த்தனை வளர்ச்சி மற்ற நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்