சனாதான கொள்கைகள் மிக முக்கியமானது.! மாணவர்கள் மத்தியில் ஆளுநர் ரவி பேச்சு.!

Default Image

உலக அளவிலான ஒருமைப்பாட்டில் நமது சனாதன கொள்கைகள் மிக முக்கியமானது எனவும், நம்மிடையே பல வேற்றுமைகள் இருந்தாலும் நாம் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். – ஆளுநர் ரவி பேச்சு. 

ஒரே பாரதம் உன்னத பாரதம் – யுவ சங்கமம் எனும் பெயரில் சென்னை கிண்டி ராஜ்பவனில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரிபுரா மாநில NIT (தேசிய தொழில்நுட்ப கல்லூரி) மாணவர்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவர்களிடையே உரையாற்றினார்.

ஒரே பாரதம், உன்னத பாரதம் : அப்போது பேசுகையில், 2047ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகள் மத்தியில் இந்தியா உன்னத நிலையை எட்டுவதற்கு, இந்தியாவின் எழுச்சிக்காகவும் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உறுதியான கோட்பாடு மிக முக்கியமான ஒன்றாகும்.
நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், நாட்டுப்புற கலைகள் மற்றும் கதைகள் அனைத்துமே நாட்டின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன.

சனாதன கொள்கைகள் : உலக அளவிலான ஒருமைப்பாட்டில் நமது சனாதன கொள்கைகள் மிக முக்கியமானது எனவும், நம்மிடையே பல வேற்றுமைகள் இருந்தாலும் நாம் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். அந்த ஒற்றுமையால் தான், கட்டமைக்கப்பட்டு இருக்கிறோம். ஒன்றுபட்டு கிடந்த நமது ராஜ்ஜியங்கள், ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்டதற்கு முக்கிய காரணம் நமது கலாசார-நாகரிக துண்டிப்பு தான் எனவும் ஆளுநர் ரவி கூறியுள்ளார்.

பிரதமர் மோடி : மேலும், நமது மாநிலங்கள் தேவைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவை. ஆனாலும் பாரதம் எனும் ஆன்மா அனைத்து மாநிலங்களையும் ஒருமுகப்படுத்தி உள்ளது. நமது பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களையும், தாய் மண்ணையும் இரு கண்களாகவே பார்க்கிறார். நம் நாட்டை பற்றி உலக நாடுகளின் பார்வை தற்போது வெகுவாக மாறிவிட்டது. என்றும், மக்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் நமது தேசம் வளரும். இந்த தேசத்தை தகுதியான இடத்திற்கு கொண்டு செல்லும் கடமை மக்களுக்கு இருக்கிறது. என்றும் அந்த விழாவில் ஆளுநர் ரவி பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்