Today’s Live : மின்சார வேலியை கடக்க முயன்ற மூன்று யானைகள் பலி..! குட்டியானைகளின் நிலை குறித்து உயர் நீதிமன்றம் கவலை..!

Default Image

குட்டியானைகளின் நிலை:

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த யானைகளின் இரு குட்டிகளை, பிற யானை கூட்டத்துடன் சேர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இணைக்க இயலாவிட்டால் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு வனத்துறை பதிலளித்துள்ளது.

2023-03-07 05:40 PM

முதலமைச்சர் கடிதம் :

தமிழ்நாட்டை சேர்ந்த 6 மீனவர்கள் உட்பட 16 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Readmore : மீனவர்கள் பிரச்சனை.. பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

mk stalin dmk
2023-03-07 05:20 PM

குமரி கடலில் குளிக்கத் தடை:

கன்னியாகுமரி கடலில் ஏற்பட்டுள்ள சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அலைகள் கொந்தளிப்புடன் காணப்படுவதால் கடலில் குளிப்பவர்களை பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

2023-03-07 04:37 PM

விண்வெளி தொழில் பூங்கா:

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் செயற்கைக்கோள் ஏவுதளம் அருகே விண்வெளி தொழில் பூங்கா, விண்வெளி எரிபொருள் பூங்காக்களை அமைக்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

2023-03-07 03:41 PM

டெல்லி கலால் கொள்கை வழக்கு:

டெல்லி கலால் கொள்கை வழக்கில் நடந்து வரும் விசாரணை தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் அருண் ராமச்சந்திர பிள்ளையை மார்ச் 13 வரை அமலாக்க இயக்குநரகம் (ED) காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2023-03-07 03:27 PM

எம்எல்ஏக்கள் பதவியேற்பு :

நாகாலாந்து அமைச்சரவையில் ஜி கைடோ அயே, ஜேக்கப் ஜிமோமி, கேஜி கென்யே, பி பைவாங் கொன்யாக், மெட்சுபோ ஜமீர், டெம்ஜென் இம்னா அலோங், சிஎல் ஜான், சல்ஹுதுவோனுவோ க்ரூஸ் மற்றும் பி பாஷாங்மோங்பா சாங் உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

2023-03-07 02:24 PM

நாகாலாந்து முதல்வராக பதவியேற்பு :

நாகாலாந்து மாநில முதல்வராக பதவியேற்ற நெய்பியு ரியோவிற்கு ஆளுநர் இல.கணேசன் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Readmore : நாகாலாந்து முதல்வராக நெய்பியு ரியோ பதவியேற்பு.!

Neiphiu RioCMoath

2023-03-07 02:20 PM

3 யானைகள் பலி:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் மின்சார வேலியை கடக்க முயன்ற மூன்று யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. சட்டவிரோதமாக மின் வேலி அமைத்த நபர் கைது செயப்பட்டுள்ளதாக தருமபுரி வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Readmore : 3 யானைகள் பலி.! சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணை.!

2023-03-07 01:14 PM

அதிமுகவில் இணையும் பாஜக நிர்வாகி:

பாஜகவின் மாநில தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளராக இருந்த திலிப் கண்ணன், பாஜகவிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

Readmore : அதிமுகவில் இணைந்தார் பாஜக முன்னாள் நிர்வாகி திலிப் கண்ணன்!

2023-03-07 12:14 PM

ஒரு விவசாயி கூட தற்கொலை செய்யவில்லை :

உத்தர பிரதேசத்தில் கடந்த 6 வருடங்களில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் கொண்டுள்ளார். முன்பு கடன்காரர்களையே நம்பியிருந்த விவசாயிகள், பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின் அவரின் திட்டங்களால் பயனடையும் வாய்ப்பை பெற்றுள்ளனர் என்று  கூறினார்.

2023-03-07 11:43 AM

மேகாலயா முதல்வராக கான்ராட் சங்மா பதவியேற்பு :

மேகாலயா முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள கான்ராட் சங்மா, புதிய அரசின் பதவியேற்பு விழாவிற்கு ராஜ்பவனுக்குச் செல்வதற்கு முன், அனைத்து கேபினட் அமைச்சர்களுடன் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

2023-03-07 10:36 AM

கலைவாணர் மாளிகை திறப்பு:

நாகர்கோவில் மாநகராட்சியின் புதிய அலுவலக கட்டடமான கலைவாணர் மாளிகையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

KalaivanarHouse

2023-03-07 10:15 AM

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்