நாகாலாந்து, மேகாலயா முதல்வர்கள் பதவியேற்பு; பிரதமர் மோடி பங்கேற்பு.!

Default Image

தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியின் நெய்பியு ரியோ மற்றும் தேசிய மக்கள் கட்சியின் (என்பிபி) தலைவர் கான்ராட் சங்மா ஆகியோர் முறையே நாகாலாந்து மற்றும் மேகாலயா முதலமைச்சராக இன்று பதவியேற்கவுள்ளனர்.

modi part cm

பிரதமர் மோடி பங்கேற்பு:                                                                                நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்கின்றனர். இரு மாநிலங்களிலும் கடந்த பிப்-27 இல் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் மார்ச்-2 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

neiphew rio ng

5-வது முறை முதல்வர்:                                                                                நாகாலாந்து மாநிலத்தில் உறுதியான வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து 5-வது முறையாக நெய்பியு ரியோ முதல்வராகப் பதவியேற்க உள்ளார். நாகாலாந்து தேர்தலில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி-பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது. 60 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் இரு கட்சிகளும் 37 இடங்களைப் பெற்று ஆட்சி அமைக்க உள்ளன.

megh cm

கான்ராட் சங்மா:                                                                                        மேகாலயாவில், என்பிபி தலைமையிலான கூட்டணி, 45 எம்எல்ஏக்களின் ஆதரவுடன், பாஜகவின் இருவர், மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளனர். சட்டசபை தேர்தலில் கான்ராட் சங்மாவின் என்பிபி கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக ஆட்சி அமைக்க உள்ளது. பதவியேற்பு விழா ஷில்லாங்கில் உள்ள ராஜ்பவனில் இன்று நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்