போக்குவரத்துத்துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58 ஆக குறைக்க பரிந்துரை.!
தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 இலிருந்து 58 ஆகக் குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது கடந்த 2021 ஆம் வருடம் 58இலிருந்து 60 ஆக தமிழ்நாடு அரசு உயர்த்தியிருந்தது. மேலும் போக்குவரத்துத்துறையில் இந்த 60 வயது வரம்பினால் பணியாளர்கள் பலரும் வயது மூப்பினால் ஏற்படும் உடல்நிலை பாதிப்பு காரணமாக விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டிருந்தனர்.
போக்குவரத்து பணியாளர்கள் தரப்பிலும் இது குறித்து 58 வயதுக்கு மேல் பணி புரியும் போது சிலருக்கு உடல்நிலை பாதிப்பு, கண்பார்வை கோளாறு போன்றவற்றால் பேருந்துகளை இயக்கும்போது அது விபத்துக்கு வழிவகுக்கின்றன என்பதால் 58 வயதே போதுமானது என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தற்போது போக்குவரத்து பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58 ஆகக் குறைக்க தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் அரசு தரப்பிலிருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.