AK 62 படத்தை முடித்துவிட்டு சர்வதேச அளவில் சுற்றுப்பயணம் செல்லும் நடிகர் அஜித்குமார் ..!
AK62′ படத்திற்கு பிறகு, ‘பரஸ்பர மரியாதை பயணம்’ என்ற பெயரில் சர்வதேச பைக் சுற்றுப்பயணம் தொடங்குகிறார் நடிகர் அஜித் குமார்
துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. தற்காலிகமாக AK62 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா தயாரிக்கிறது.
இந்நிலையில், அஜித்குமார் தனது ரசிகர்களுக்கு அறிவுரை அல்லது தன்னை பற்றி ஏதேனும் விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றால், தனது மேலாளர் சுரேஷ் சந்திரா மூலம் அறிவித்து வருகிறார். அந்த வகையில், தற்போது சுரேஷ் சந்திரா தனது ட்வீட்டர் பக்கத்தில் 2ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு அஜித் செல்லவுள்ளதாக அறிவித்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு ,திரு அஜித் குமார் துவங்க இருக்கும் 2ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது.
— Suresh Chandra (@SureshChandraa) March 6, 2023
இது குறித்து சுரேஷ் சந்திரா தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியதாவது ” லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு ,திரு அஜித் குமார் துவங்க இருக்கும் 2 ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது” என அறிவித்துள்ளார்.
மேலும் ஏற்கனவே அஜித் துணிவு திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஐரோப்பா நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது 2 ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.