அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான்- அமைச்சர் பொன்முடி
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு மற்றும் உதவித்தொகை வழங்கப்படுவது தமிழ்நாட்டில் மட்டும்தான் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
திருக்கோயிலூர் அருங்குறுக்கை அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிதாக, கட்டப்பட்டுள்ள வெளிபுறச்சுவரை திறந்து வைத்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அரசுப்பள்ளி மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் பல்வேறு உதவிகளை எடுத்துக்காட்டி மாணவர்களிடையே உரையாற்றினார்.
அவர் கூறியதாவது, அரசுப்பள்ளி மாணவர்கள் உயர் கல்விக்கு செல்லும்போது 7.5% சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது, மற்றும் மாணவிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது இவ்வாறு வழங்கப்படுவது இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் என தெரிவித்துள்ளார்.