தந்தையை கவனிக்காத பிள்ளைகள்.! விரக்தியில் 85 வாயது முதியவர் எழுதிய பரபரப்பு உயில்.!
பெற்ற பிள்ளைகள் தன்னை சரியாக கவனித்து கொள்ளவில்லை என கூறி 85 வயது முதியவர் ஒருவர் தனது சொத்துக்களை அரசுக்கு எழுதி வைத்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தின் முசாபர்நகரைச் சேர்ந்த முதியவர் நாத் சிங் எனும் முதியவர் ஒருவர் தனது பிள்ளைகள் தங்களை சரிவர கவனித்து கொள்வதில்லை என கூறி தனது சொத்துக்களை அரசுக்கு உயில் வடிவில் எழுதி வைத்துவிட்டார்.
நாத் சிங் எனும் 85 வயது முதியவர் தனது உயிலில் குறிப்பிட்டுள்ளது யாதெனில், எனது இறப்புக்கு கூட நான் பெற்ற பிள்ளைகள் வரக்கூடாது எனவும் , தனது இறுதிச்சடங்குகளை அவர்கள் செய்யக்கூடாது. எனவும், குறிப்பிட்டு, தனது எனது நிலத்தில் என் பெயரில் பள்ளியோ மருத்துவமனையோ, அரசு கட்டிக்கொள்ளலாம் என கூறி தனது 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை உயில் மூலம் எழுதி வைத்துள்ளார்.